Tuesday, April 29, 2014
மதுரை::மதுரையில், இலங்கையை சேர்ந்த வியாபாரியிடம், 26 சவரன் நகை மோசடி
செய்த மூவரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை,
கொழும்புவைச் சேர்ந்தவர் மேசரத்தினம், 44. இவர், மதுரையில் பொருட்களை
வாங்கி, இலங்கையில் விற்று வந்தார். நேற்று முன்தினம், மதுரையில், ஏற்கனவே
அறிமுகமான, 36 - 40 வயதுடைய மூன்று பேரிடம், 26 சவரன் நகைகளை விற்றுத்
தரும்படி கூறியுள்ளார்.
நகைக்கடை பஜாருக்கு அழைத்து சென்று, நகையை
வாங்கி, அங்கே காத்திருக்கும்படி கூறி சென்றவர்கள், நீண்ட நேரமாகியும்
வரவில்லை. இதுகுறித்து, மேசரத்தினம் கொடுத்த புகாரின்படி, மூவரிடமும்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment