இலங்கை::இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த பூரண ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முழு அளவில்
ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயர்
(ர்ரபழ ளுறசைந) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் வெளியிடப்பட்ட அறிக்கையை வரவேற்பதாகத் தெரிவித்தள்ளார்.
2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்
நவனீதம்பிள்ளை இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது செய்யப்பட்ட
பரிந்துரைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் இதுவரையில் கவனத்திற் கொள்ளாமை
வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான சகல விதமான உதவிகளையும் அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை
விதித்தல் தொடர்பிலான பொறிமுறைமை ஒன்றை உருவாக்க தொழில்நுட்ப உதவிகளை
வழங்குவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு வழங்கிய பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம்
உதாசீனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு
சர்வதேச சமூகத்திற்கு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு ரீதியில் நம்பகமான விசாரணகைள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச
விசாரணைகளை வலியுறுத்த வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றுத்ல், சிறுவர் போராளிகளை சமூகத்துடன் மி இணைத்தல்,
யுத்த வலய பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில்
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள பணிகள் வரவேற்கப்பட வேண்டியது என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment