Sunday, March 02, 2014
இலங்கை::யுத்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத புலம்பெயர் தமிழ் சமூகம் இலங்கைக்கு
எதிராக செயற்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம
தெரிவித்துள்ளார். யுத்தத்தில் தோல்வியைத் தழுவிய யதார்த்தை ஜீரணிக்க
முடியாத சில புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு எதிரான வகையில் செயற்பட்டு
வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
25 ஆண்டு கால யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்திற்கு விஜயம்
செய்துள்ள அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமை
மீறல்கள் இடம்பெறவில்லை எனவும், தமிழ் புலம்பெயர் சமூகம் போலியான
குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர் தமிழ் சமூகம் சூழ்ச்சித்
திட்டங்களை கட்டவிழ்த்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்திற்கும்
புலம்பெயர் சமூகத்திற்கும் இடையிலான அதிகார மோதலாகவே மனித உரிமை மீறல்
பிரச்சினை கருத வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுக்களுக்கும் விரைவில் பதிலளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment