Saturday, March 1, 2014

புதிய விமானப்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு: எயார் மார்ஷல் கோலித குணதிலக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார் !

Saturday, March 01, 2014
இலங்கை::இலங்கை விமானப்படையின் 14வது தளபதியாக ஏயார் மார்ஷல் கோலித குணதிலக  நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

விமானப்படை தளபதியாக இருந்த ஏயார் மார்ஷல் ஹர்ச அபேவிக்ரம ஓய்வு பெற்றதை அடுத்து அப்பதவிக்கு கோலித குணதிலக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
புதிய விமானப்படைத் தளபதியாக நேற்று  பொறுப்பேற்றுக்கொண்ட எயார் மார்ஷல் கோலித குணதிலக்க, மரியாதை நிமிர்த்தமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்தார்
 
விமானப்படையின் 14ஆவது தளபதியாக கடமைகளை பொருப்பேற்ற எயார் மாஷல் கோலித குணதிலக்க பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களை  நேற்று சந்தித்தார்.
 
எயார் மாஷல் கோலித குணதிலக்க இலங்கை விமானப் டையில் 1980 ஆம் ஆண்டு 8 ஆவது தொகுதி கெடட் அதிகாரியாக உள்ளீர்க்கப்பட்டதுடன் 1982 ஆம் ஆண்டு விமான ஓட்டி அதிகாரியாக அதிகாரமளிக்கப்பட்டார்.
இச்சந்திப்பின் போது சினேக பூர்வமாக இருவரும் கலந்துரையாடியதுடன் புதிய தளபதி பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கினார்.

No comments:

Post a Comment