Tuesday, February 25, 2014

பொதுமக்களிடமிருந்து தூரப்படுத்தப்பட்டிருந்த அரச சேவையை மக்களுக்கு மிக வும் நெருக்கமானதாக மாற்றியமைத்தது தற்போதைய அரசாங்கமே: பசில் ராஜபக்ஷ!

Tuesday ,25, February. 2014
இலங்கை::இலங்கை::பொதுமக்களிடமிருந்து தூரப்படுத்தப்பட்டிருந்த அரச சேவையை மக்களுக்கு மிக வும் நெருக்கமானதாக மாற் றியமைத்தது தற்போதைய அரசாங்கமே என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஏற்கனவே இருந்த அரசாங்கம் அரச சேவையை கீழ் மட்டத்தில் வைத்தி ருந்ததால் அரச சேவை பொதுமக் களிடமிருந்து தூரப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போதைய அரசாங்கம் அரச சேவையை வலுப்படுத்தி மேம்படுத்து வதற்காக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதால் சிறந்த முறை யில் மக்கள் சேவையை வழங்க முடிந் துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குளியாப்பிட்டியவில் நடைபெற்று வரும் 8வது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை பார்வை யிட வருகை தந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நேற்று பல்வேறு வேலைத் திட்டங்களையும் ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
சகல அமைச்சுக்கள், அரசாங்க திணைக்களங்கள், நிறுவனங்கள் ஒன்றி ணைந்து மக்களுக்காக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் இந்த வேலைத் திட்டங்களை தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி மூலம் பார்வையிட முடியும்.


முப்பது ஆண்டு கால யுத்தத்தினால் அழிந்து போயிருந்த நாட்டை குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தி செய்ய அர சாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் அரசாங்கத்தின் எதிர்கால இலக்கு என்பவற்றை நாட்டிற்கும் மக்களுக்கும் தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடத்துவதற்கு தீர்மானத்தை மேற்கொண்டார்.

அந்த அடிப்படையில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் தலைமையில் இம்முறையும் 8 வது தடவையாக வெற்றிகரமாக இடம்பெற்று வருகிறது.
கண்காட்சி, அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு அப்பால் இவ்வாண்டு முதல் மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக நடமாடும் சேவைகளை ஆரம்பித்து வைத்தோம்.


இதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் 11 இலட்சத்து 45,931 பிரச்சினைகள் இந்த நடமாடும் சேவை வேலைத்திட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன. இவற்றில் 80 வீதமான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் இந்த பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில பிரச்சினைகள் சட்டத்துடன் தொடர்புபட்டு காணப்படுவதால் அவற்றை சட்ட விதிமுறைகளுக்கு அமைய தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரி வித்தார்.

இதேவேளை, நாட்டின் பொரு ளாதாரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ‘திவிநெகும’ வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அதன் மூலம் கிராமிய, சிறுதொழில் ஈடு படுபவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுநரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அதன் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment