Tuesday, February 25, 2014

எஞ்சியுள்ள புலி உறுப்பினர்கள் பிரிவினைவாதத்தை தூண்டி வருகின்றனர்: அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க திசர சமரசிங்க!

Tuesday ,25, February. 2014
இலங்கை::எஞ்சியுள்ள  புலி உறுப்பினர்கள் பிரிவினைவாதத்தை தூண்டி வருவதாக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் மனுஸ் தீவு புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் கடமையாற்றுவது குறித்து எழுந்துள்ள சர்ச்சை அனாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை அமைப்புக்களும், புகலிடக் கோரிக்கையாளர் ஆதரவு அமைப்புக்களும் குறித்த இலங்கை படையதிகாரியை பணி நீக்குமாறு கோரி வருகின்றன.

மனுஸ் தீவுகளில் காணப்படும் புகலிடக் கோரிக்கையாளர் தடுப்பு முகாமில் தினேஷ் பெரேரா என்ற இலங்கை இராணுவ அதிகாரி செயற்பாட்டு முகாமையாளராக கடமையாற்றி வருகின்றார்.

இலங்கை படையதிகாரி ஒருவர் புகலிட முகாமின் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தினேஷ் பெரேரா இலங்கைப் பிரஜையா, அவுஸ்திரேலியா பிரஜையா என்பது தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தினர் சிறந்த தொழிற் தகமைகளையும் ஒழுக்கத்தையும் கொண்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் பிடியில் இருந்த 300000 அப்பாவி பொதுமக்களை படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment