Saturday, February 01, 2014
சென்னை::கருணாநிதி - மு.க.அழகிரி மோதல் பிரச்சினை நேற்று
சட்டசபையில் எதிரொலித்தது.இதையொட்டி தி.மு.க.உறுப்பினர்கள் அமளியால்
அவர்கள் சபையிலிருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
கருணாநிதி குடும்பப்பிரச்சனையை பிரச்சினையை நாடே அறிந்துள்ளது. அதை
ஏன் ஏன் சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம்
தெரிவித்தார்,
சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.) பேசினார்.
அப்போது, தி.மு.க. தலைவர் அவரது மகன் தன்னை காலை 6 மணிக்கு வீட்டுக்கு
வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக பத்திரிகைகளுக்கு தெரிவித்து நாடகம்
நடத்துகிறார். அவர் போலீசில் புகார் செய்திருந்தால் புரட்சித் தலைவி
நடவடிக்கை எடுத்து மு.க.அழகிரியை கைது செய்திருப்பார் என்றார்.
இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மார்க்கண்டேயன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றனர்.
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்தார்.
சபாநாயகர்:_ தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் அமருங்கள்.
உங்கள் கட்சி துணைத்தலைவர் துரைமுருகனுக்கு பேச வாய்ப்பு கொடுத்துள்ளேன்.
மாற்று கருத்து இருந்தால் அவர் சொல்லலாம்.
துரைமுருகன்:_ கவர்னர் உரைக்கு தேவை இல்லாத, சம்பந்தம் இல்லாத
விஷயங்களை உறுப்பினர் பேசி உள்ளார். அவற்றை சபை குறிப்பில் இருந்து நீக்க
வேண்டும்.
சபாநாயகர்:_ நான் அதை படித்து பார்த்து விட்டு பிறகு முடிவு எடுக்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்:_ உறுப்பினர் ஜெ.அன்பழகன் சபாநாயகரிடம் கையைக் காட்டி
அவை மரபை மீறும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
(இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து கோஷம் போட்டனர்).
சபாநாயகர்:_ உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவை நடவடிக்கையை மீறும் வகையிலும்
சபாநாயகரை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டதால் அவரை சபையில் இருந்து
வெளியேற்ற உத்தரவிடுகிறேன்.
(உடனே காவலர்கள் வந்து ஜெ.அன்பழகனை சபையில் இருந்து வெளியேற்றினார்கள்).
அமைச்சர் முனுசாமி:_ தி.மு.க. தலைவர் அவரது மகன் பற்றி கொடுத்த பேட்டி
அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளியாகி, உலகம் முழுவதும் தமிழ் பேசும்
மக்கள் மனதில் பதிந்து இருக்கிறது. அந்த கருத்தை சட்டசபையில் பதிவதில் என்ன
தவறு உள்ளது.
துரைமுருகன்:_ கவர்னர் உரைக்கும் அவரது பேச்சுக்கும் சம்பந்தம் இல்லை.
எனவே அதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.இதைத்தொடர்ந்து சில
வார்த்தைகளை துரைமுருகன் பேசினார். அது அவை குறிப்பில் இருந்து
நீக்கப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம்:_ இவர்கள் தலைவர் குடும்பப்பிரச்சனையை பிரச்சினையை
நாடே அறிந்துள்ளது. அதை ஏன் ஏன் சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்
என்று தெரிவித்தார்
முனுசாமி:_ ஒரு மகனே இன்னொரு மக
னை கொலை செய்யப் போவதாக அவரது கட்சி
தலைவர் சொல்லி உள்ளார். ஒரு குடும்பத்தை சரி செய்ய முடியாதவர் நாட்டை
எப்படி சரி செய்ய முடியும்.
(இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு கோஷம் எழுப்பினார்கள்.
சபாநாயகர்:_ தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகமாக
நடந்து கொள்கிறார்கள். எனவே தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் சபையில்
இருந்து வெளியேற்ற உத்தரவிடுகிறேன்.
கவர்னர் உரையை தி.மு.க. உறுப்பினர் கிழித்து வீசியுள்ளனர். எனவே காவலர்கள் அவர் களை வெளியேற்ற வேண்டும்.
இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சபையில் இருந்து வெளியில் வந்ததும் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:_
கவர்னர் உரையில் உறுப்பினர் மார்கண்டேயன் பேசினார். தி.மு.க. தலைவரை
தீய சக்தி என்றார்.குடும்ப பிரச்சினைகளை குறிப்பிட்டு பேசினார். கவர்னர்
உரைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். எனவே அதை அவைக் குறிப்பில் இருந்து
நீக்க வேண்டும் என்று கூறினோம்.
அதற்கு சபாநாயகர் படித்து பார்த்து பரிசீலனை செய்கிறேன் என்றார்.
தேவை இல்லாமல் உறுப்பினர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கவில்லை.
இதை சுட்டிக் காட்டியதால் சபாநாயகர் எங்களை கூண்டோடு வெளியேற்றியுள்ளார்.
இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
No comments:
Post a Comment