Sunday, January 26, 2014

நம்பிக்கை, அர்ப்பணிப்பு ஊடாக அனைத்து விடயங்களையும் வெற்றிகொள்ள முடியும்: ஜனாதிபதி மஹிந்த!

Sunday, January 26, 2014
இலங்கை::செயலார்வம், நம்பிக்கை, அர்ப்பணிப்பு ஊடாக அனைத்து விடயங்களையும் வெற்றிகொள்ள முடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேகாலை புனித ஜோசப் மகளிர் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த கருத்தை முன்வைத்தார்.
நாட்டின் கல்வித்துறையினருக்காக கல்வி மட்டத்தை உயர்த்தும் நோக்கில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவவருவ
தாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மனிதவளத்தை உயர்ந்த அளவில் பயன்படுத்தி, ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மாத்திரமன்றி விஞ்ஞானிகளும் எதிர்காலத்தில் நாட்டில் உருவாகவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கேகாலை பொதுமக்களுக்காக சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் பி.பீ.ஜி.கலுகல்லவுக்காக கேகாலை நகர மத்தியில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலை இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆரம்பகால உறுப்பினரான அவர், அமைச்சரவை அமைச்சர், தூதுவர், மற்றும் உயர்ஸ்தானிகராக செயறலாற்றி வந்துள்ளார்.

சுமார் 7 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கேகாலை அம்பன்பிற்றியவில் உள்ள டோசன் மாளிகையும் இன்று ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கேகாலை நகரில் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக 3600 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வெளிசுற்றுப்பாதையும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment