Thursday, January 2, 2014

இராணுவத்தினர் நன்மதிப்பை சீரிய ஒழுக்கத்தை பேண வேண்டும்: இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க!

Thursday, January 02, 2014
இலங்கை::இராணுவத்தினர் சீரிய ஒழுக்கத்தை பேண வேண்டுமென இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இராணுவத்தைச் சேர்ந்த சகல நிலைகளிலும் பதவி வகிப்பவர்கள் ஒழுக்கத்தை உரிய முறையில் வேண வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத்தின் நன்மதிப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


இராணுவத்தினரின் அர்ப்பணிப்பும் தியாயகமும் நல்ல பலனை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் பணிக் கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment