Sunday, January 26, 2014
இலங்கை::யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, காணாமல் போனவர்கள் தொடர்பாக திரட்டிய தகவல்களை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.
இலங்கை::யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, காணாமல் போனவர்கள் தொடர்பாக திரட்டிய தகவல்களை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.
கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 162 சம்பவங்கள் பற்றிய
தகல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்தத்
தகவல்கள் சட்ட மா அதிபர்
திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர்
எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் பற்றிய முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு நாட்களாக கிளிநொச்சியில் தகவல் திரட்டப்பட்டதாகவும், வட மாகாணசபை
உறுப்பினர் ஆனந்தி சசிதரன் உள்ளிட்ட 440 பேர் முறைப்பாடு செய்துள்ளதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகள் திருப்திகரமாக அமைந்தது என்றே உணர்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment