Sunday, January 26, 2014

இராணுவ வீரர்களுக்கான "வர்ண இரவு" வைபவம்!

Sunday, January 26, 2014
இலங்கை::பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த இராணுவ வீரர்களுக்கான வர்ண இரவு-2013 கொண்டாட்ட நிகழ்வுகள் ‘விளையாட்டினுடாக நல்லிணக்கம்’ எனும் கருப்பொருளில் இராணுவ விளையாட்டுத் துறையில் பிரகாசிப் போருக்காக     (ஜன.24) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
 
இந்நிகழ்வின் போது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்கள் இராணுவத் தளபதியினால் வரவேற்கப்பட்டார்.
 
பாரம்பரிய விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்த யுத்த வீரர்களுக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலியை அடுத்து இராணுவ கீதம் இசைக்கப்பட்டு பணிப்பாளர் நாயகம் (விளையாட்டு) மேஜர் ஜெனரல் ஜானக்க ரத்னாயக்கவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவாவனிதாப் பிரிரவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷ, கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, சேவாவனிதா இராணுவப்பிரிவின் தலைவி திருமதி.தமயந்திரத்னாயக்க, சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினரின் துனைவியர்கள் மற்றும் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment