Friday, January 31, 2014
இலங்கை::வடக்கு மாகாணத்திலுள்ள நீதிபதிகளுக்கான செயலமர்வு இன்று காலை யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
மாவட்டத்தின் உயர் நீதிமன்ற நீதிபதியும், நீதிமன்ற ஆணையாளருமான நீதிபதி பிரேம்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டின் பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ் மற்றும் அமெரிக்காவின் நீதிபதிகள் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது, நாட்டின் சட்டங்கள் மற்றும் அதன் நடைமுறைகள் தொடர்பாக நீதிபதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் மனிதாபிமான நடைமுறைகள் தொடர்பிலும் எடுத்துக் கூறப்பட்டது.
இந்த செயலமர்வில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பிரேம்சங்கர் மற்றும் மாவட்ட நீதிபதி உள்ளிட்ட மாவட்டத்தை மற்றும் மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நீதிபதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment