Thursday, January 02, 2014
இலங்கை::2014 ஆம் புதிய வருடத்தை வரவேற்று அமைச்சின் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நேற்று அமைச்சில் இடம்பெற்றது.
பௌத்த, இந்து, இஸ்லாம், மத குருமார்களின் மத அனுஸ்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வைபவத்தில் அரசசேவையின் உறுதிமொழி அனைத்து அதிகாரிகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானசோதி அவர்கள் அமைச்சின் புதிய வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பிலும் புதிய திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
இதன்போது உரையாற்றிய பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க 2013 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களை விட பாரிய வேலைத்திட்டங்களை 2014 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
எமது அமைச்சின் ஊடாக நாடாளவிய ரீதியிலுள்ள அனைத்து கைத்தொழிலாளர்களினதும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நாம் பலம் பொருத்தியவர்களாக செயற்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி அவர் வலியுறுத்தினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அமைச்சின் செயற்திட்டங்களையும் அதற்கு மேலதிகமாக கைத்தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய புதிய திட்டங்களையும் வகுத்து நாம் சிறந்த முறையில் செயலாற்றுவதற்கு முன்வர வேண்டுமென்றும் எமது உழைப்பின் அனைத்து பயன்களும் எமது இலக்காகிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு நன்மையாக அமைய வேண்டுமென்றும் அதேநேரம் உங்களது செயற்பாடுகளின் மூலம் உங்களது வாழ்க்கையை ஒளிமயமானதாக்கிக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment