Sunday, December 01, 2013
இலங்கை::பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, இந்தியாவுக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு,நடத்தியிருக்கிறார்.
குறுகிய காலப் பயணம் ஒன்றை புதுடெல்லிக்கு மேற்கொண்ட கோத்தாபய ராஜபக் ஷ, வியாழக்கிழமை காலை, இந்திய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.
இதையடுத்து, கொழும்பு திரும்ப முன்னதாக, வௌ்ளிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும், அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு முடிவடைந்த பின்னர், நடந்துள்ள முதலாவது இருதரப்பு சந்திப்பான இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பொதநலவாய மாநாட்டுக்கு முன்னதாக, கோத்தாபய ராஜபக் ஷ புதுடில்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அது தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை அதிகளவில் ஏற்படுத்தும் என்பதால், அவரது புதுடில்லி வருகையை பிற்போடும் படி இந்தியா கேட்டிருந்தது.
இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் டி.கே.ஜோஷி இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்த சூழலில், பாதுகாப்புச்செயலரின் புதுடில்லிப் பயணம் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment