Sunday, December 1, 2013

புலிகூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதா, இல்லையா, என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

Sunday, December 01, 2013
இலங்கை::வடமாகாணசபை புலிகூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்வதா, இல்லையா, என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் பிரதீப மஹாநாமஹேவா இதனை தெரிவித்துள்ளார் .

கடந்த மாதம் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருன் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது புலிகூட்டமைப்பு அனந்தி தலைமையில் காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இந்த சம்பவத்தை அடுத்து தமக்கும் பிள்ளைகளுக்கும் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புலிகூட்டமைப்பு
அனந்தி யாழ்ப்பாணத்தில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

இந்தநிலையில் இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது என்று மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment