Tuesday, December 03, 2013
சென்னை::இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதிலலி என்று இந்திய கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி (பொறுப்பு) கமாண்டர் அமர் கே.மகாதேவன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், ஆண்டு தோறும் டிசம்பர் 4-ந் தேதி கடற்படை வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதே விழா, போர் நினைவு சின்னம் அருகே கொண்டாடப்பட இருக்கிறது.
இதில் ராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். அப்போது நடைபெறும் கூட்டத்தில், போரில் இறந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்படவும் உள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக செய்திகள் வருகிறது.
இந்திய கடற்பகுதியில் எந்த தமிழக மீனவர்களும் தாக்கப்படுவதில்லை. கடல் எல்லையை தாண்டி செல்லும்போதுதான், இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது. தற்போது நாட்டிற்கு பல்வேறு வகையில், அச்சுறுத்தல்கள் உள்ளன. நாட்டின் பாதுகாப்பை, பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்திய கடற்படையில் 46 கப்பல்கள் உள்ளன. மேலும் அதிநவீன கப்பல்களும், விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வாங்கப்பட உள்ளன. எந்த வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில், இந்திய கடற்படை வலுவாக உள்ளது.
கடற்கொள்ளையை தடுக்கும் வகையில், இந்திய கடற்படை மற்ற நாட்டு கடற்படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் கடற்கொள்ளை முற்றிலும் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment