Saturday, December 28, 2013
திருப்பதி::ஆந்திராவில் அனந்தபூர் அருகே இன்று அதிகாலையில் ஓடும் ரயிலில் பயங்கர தீ விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 23 பேர் உடல் கருகி பலியாயினர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
பெங்களூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் நான்டேட் நகரை நோக்கி நேற்றிரவு பெங்களூர்&நான்டேட் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், கொத்தசெருவு ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 3.45 மணியளவில் வந்த போது பி1 என்ற ஏசி பெட்டியில் திடீரென தீப்பற்றியது. இந்த பெட்டியில் பெண்கள் உள்பட 57 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இதனால், தீயை யாரும் கவனிக்காமல் மளமளவென எல்லா திசையிலும் பரவியது. உஷ்ணம் தாங்காமல் திடீரென விழித்த பயணிகள், பெட்டியில் தீப்பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, சிலர் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால், ரயில் வேகம் குறைந்து மெதுவாக சென்றதால் கண்ணாடிகளை உடைத்து சிலர் கீழே குதித்து உயிர் தப்பினர்.
அனந்தபூர் மாவட்டம் புட்டபர்த்தி பிரசாந்த் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து பயணிகளை காப்பாற்ற முயன்றனர். தீப்பிடித்த பெட்டியை தனியாக கழற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் அடுத்தடுத்துள்ள பெட்டிகளுக்கும் தீ பரவியது.
இதுகுறித்து அனந்தபூர், புட்டபர்த்தி பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுத்ததின்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அனந்தபூர் மாவட்ட கலெக்டர் லோகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் கிரண்குமார் அதிர்ச்சியடைந்தார். மேலும் மாநில அமைச்சர் ரகுவீராரெட்டி,
தீ விபத்துக்கு மின்கசிவு காரணம்?
முதல் கட்ட விசாரணையில், ஏசி பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணையை துவக்கி வருகின்றனர். ரயில்வே போர்டு சேர்மன் அருணேந்திர குமார் கூறுகையில், ‘ஏசி பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட வாய்ப்பில்லை. மின்சார போர்டு அருகே விரைவில் தீப்பற்றக்கூடிய பொருட்களை யாராவது வைத்திருக்கக் கூடும். அதனால், தீப்பிடித்திருக்கலாம். எனினும், முழுமையான விசாரணைக்கு பின்பே எதுவும் கூற முடியும். பெங்களூர் மற்றும் ஐதராபாத்தில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வருகின்றனர்’ என்றார்.

No comments:
Post a Comment