Tuesday, December 03, 2013
இலங்கை::தென்னாபிரிக்கா பிராந்தியம் உட்பட 15 நாடுகளில் இலங்கை தூதரகங்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை::தென்னாபிரிக்கா பிராந்தியம் உட்பட 15 நாடுகளில் இலங்கை தூதரகங்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மொருடானியா, புகினோ, பாசோ, டிஜிபுகி, டொங்கோ, கேமன், ஐவரிகோஸ்ட், கம்பியா, சியாராலியோன், மலாவி, சேட், மத்திய ஆபிரிக்க குடியரசு, கெமரூன், கினியா, கேப்வர்ட், நைபர் ஆகிய நாடுகளில் இலங்கை புதிய தூதரங்களை ஏற்படுத்த உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
ஆபிரிக்க நாடுகளில் 7 நாடுகள் மட்டுமே பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டன.
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகள் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் தூதுவர்களை ஜெனிவாவில் சந்தித் இலங்கைக்கு எதிராக பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் அணியொன்று அண்மையில் ஜெனிவாவில் போஸ்ட்வானா நாட்டின் தூதுவரை சந்தித்து இரகசியமான பேச்சுக்களை நடத்தியதாகவும் திவயின கூறியுள்ளது.
இந்த நிலையில் புலம்பெயர் புலிகளின் செயற்பாடுகளை முறியடிக்க 15 ஆப்பிரிக்க நாடுகளில் தூதரகங்களை திறக்க அரசாங்கம் தீர்
மானித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment