Thursday, November 28, 2013

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்க பிஸ்கட் பறிமுதல்!

Thursday, November 28, 2013
மதுரை::இலங்கையிலிருந்து மதுரைக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 400 கிராம் தங்க பிஸ்கட்களை, பறிமுதல் செய்த, சுங்கவரித் துறையினர், ஒருவரை கைது செய்தனர்.
இலங்கை, கொழும்புவிலிருந்து, "மிகின் லங்கா' ஏர்லைன்ஸ் விமானம், நேற்று காலை, 8:30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தது.

இதில் வந்த, தஞ்சாவூரை சேர்ந்த, நைனா முகமது என்பவரின் நடவடிக்கைகள், சந்தேகம் அளிப்பதாக இருந்தன. அவரை சுங்க வரித்துறையினர் சோதனையிட்ட போது, இடது கை தோள்பட்டை இடுக்கு கை துண்டு மூலம் கட்டப்பட்டிருந்தது.

அதை பிரித்த போது, தலா, 100 கிராம் எடையுள்ள நான்கு தங்க பிஸ்கட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், நைனா முகமதுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

No comments:

Post a Comment