இலங்கை::தமது நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையிலுள்ள தமிழக மாநில அரசாங்கமே இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது என ஜனாதிபதியின் பேச்சாளரும் சிரேஷ்ட அரசியல் அவதானியுமான கலாநிதி மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
இதனை ஆயுதமாக்கிக் கொண்டே இந்தியப் பிரதமர் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதை தடை செய்ய தமிழ்நாடு அழுத்தங்களைப் பிரயோ கிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.எவ்வாறெனினும் இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளா விடில் அது இந்தியாவுக்கு துரதிஷ்ட மாக அமைவதுடன் பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற பாரிய அமைப்புகளின் ஆதரவும் இந்தியா வுக்கு அற்றுப் போகும் நிலை ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
கலாநிதி மொஹான் சமரநாயக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டி யில் மேலும் குறிப்பிடுகையில்:-
இந்தியாவின் அரசியல் வித்தியாச மானதும் சிக்கலானதுமாகும். எதிர்ப் புகள் பெருமளவில் உள்ள அரசியலாகும். ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின்னர் எந்தவொரு கட்சிக்கும் தனியே அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு மாநில அரசுகளின் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.தமிழ்நாடு 44 தொகுதிகள் பலத்துடன் மத்திய அரசின் முக்கிய பங்காளியாக உள்ளது. இங்கு உள்ளூர் அரசியல் பிரச்சினைகள் உள்ளன. பல்வேறு சிக்கலுக்குட்பட்டுள்ளது. மக்கள் உணர்வு பூர்வமாகச் செயற்படும் நிலையும் உள்ளது.தமிழ் நாட்டிற்குள் பாரிய பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் இலங்கை தமிழர்கள் பற்றி நீளக் கண்ணீர் வடித்தபோதும் தமிழ்நாட்டு மக்கள் வசதிகளின்றி பட்டினியுடன் வாழும் நிலையே பல பகுதிகளில் உள்ளது. மலசல கூடம் இல்லாத மக்கள் பெருந்தொகையில் உள்ளனர்.
இதுபோன்ற நாட்டின் தலைவர் அயல் நாட்டு மக்களின் பிரச்சினையை மேலெழுப்புவது தமது மக்களிற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணமே. தி.மு.கவும், அ. தி.மு.கவும் மக்களை ஏமாற்றியே அடுத்தடுத்து ஆட்சிக்கு வருகின்றன.மக்கள் பிரச்சினையை விடுத்து வேறு பிரச்சினையை ஆயுதமாகப் பயன்படுத்தினால் மட்டுமே தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற கொள்கையிலேயே இக்கட்சிகள் இயங்குகின்றன. இதனையே இந்தியப் பிரதமர் இலங்கை மாநாட்டுக்கு வருவதைத் தடுக்க தமிழ்நாடு உபயோகப்படுத்துகிறது. இது இந்தியாவுக்கு துரதிஷ்டமானது. சமாதானம் அமைதிக்கும் பங்கமாக அமையும். பொதுநலவாய நாடுகள் அமைஎனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment