Thursday, August 29, 2013

தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை தேர்தல் பிரச்னையாக என்றும் இருந்ததில்லை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்!

Thursday, August 29, 2013
சென்னை::தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை தேர்தல் பிரச்னையாக என்றும் இருந்ததில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.
 
கட்சி நிர்வாகிகள் சந்திப்புக் கூ
ட்டத்தில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை சிதம்பரத்துக்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். காங்கிரஸ் கட்சி மிக எழுச்சியாக உள்ளது. இதை வாக்குகளாக மாற்ற வேண்டும்.
 
காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர்கள் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து பேச்சாளர்களுக்கு கோவையில் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வருவதற்கு வாய்ப்பில்லை.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக மனித உரிமை தீர்மானத்தின்போது கூட்டணியிலிருந்து விலகியது. தற்போது உணவுப் பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ÷தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு இந்தியா முழுவதும் ஒரே நிலைப்பாடு இல்லை என்பது உண்மைதான்.
 
ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கும் சோனியாகாந்தியின் கனவு திட்டம் இது. இத்திட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் கலந்து பேசினால் தீர்வு ஏற்படும்.
 
தமிழகத்துக்கு இத்திட்டத்தினால் மத்திய அரசு வழங்கிவரும் அரிசி தடைபடாது.
 
பாம்பன் மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் புத்த பிட்சுகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இலங்கை அரசு, மீனவர் பிரச்னையில் பிடிவாதம் பிடித்து வருகிறது.
 
பாஜக தலைவர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி எதிரியில்லை. அவருக்கு அவரே எதிரி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என்றார் பி.எஸ்.ஞானதேசிகன்.

No comments:

Post a Comment