Tuesday, August 13, 2013
இலங்கை::வருடாந்த மடு உற்சவத்தையிட்டு யாத்திரிகர்களுக்கு சௌகரியமாக அமையும் பொருட்டு விசேட புகையிரதசேவை ஒன்று இன்று (ஆகஸ்ட் 12) கொழும்பு கோட்டையிலிருந்து மடுவுக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
யுத்த காலங்களின் போது மதவாச்சியிலிருந்து மடுவரையிலான ரயில்வே தண்டவாளங்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. தற்போது அவை இந்திய அரசின் உதவியுடன் மீளமைக்கப்பட்டிருப்பதாக இலங்கை புகையிரத சேவை பேச்சாளர் ஒருவர் தெரித்தார்.
இதன்படி தண்டவாளங்கள் மீள பொருத்தப்பட்டபின் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி பரீட்சாத்த புகையிரத ஓட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. அத்துடன் மதவாச்சிக்கும் மடுவுக்கும் இடையே நெல்லிக்குளம், செட்டிக்குளம், மடு ஆகிய மூன்று புகையிரத நிலையங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் கத்தோலிக்கர்கள் தமது வருடாந்த உற்சவத்தின்போது பெரிதும் சிரமப்பட்டமையினால் மதவாச்சி - மடு புகையிரத சேவையை நடாத்தும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பரிந்துரையின் பேரில் மேற்படி சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கமைய வழமையான புகையிரத சேவைக்கு மேலதிகமாக கொழும்பில் இருந்து மதவச்சிக்கான புகையிரத சேவைகள் 12 ஆம் திகதி முதல் 16 ஆம் தி
கதி வரைக்கும் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment