Monday, July 1, 2013

இணையத்தினூடாக ஒன்றிணையும் பொலிஸ்!

Monday, July 01, 2013
இலங்கை::நாடளாவிய ரீதியிலுள்ள 433 பொலிஸ் நிலையங்கள்  உயர் அதிகாரிகளின் அலுவலங்கள் மற்றும் பொலிஸ் தலைமைக் காரியாலங்கள் என்பனவற்றை இணையத்தினூடாக ஒன்றிணைக்கும் முயற்சியொன்றில் இலங்கை பொலிஸ் தகவல் தொழிநுட்பப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பொலிஸ் பொலிஸ்
நிருவாக பொறுப்பதிகாரி டீ.ஐ.ஜி காமினி நவரத்ன கூறுகையில், தற்போது இத்திட்டத்தின் அரைப்பங்கு பூர்த்தியாகிவிட்டது. இந்த இணைய சேவை மூலம் அறிவிப்புகள் மற்றும் கட்டளைகளை விரைவாக பரிமாற்றிக்கொள்ளலாம்.

இது தவிர இந்த இணைய சேவை மூலம் குற்றவாளிகளினது தகவல்களையும் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இத்திட்டமானது டீ.ஐ.ஜி நவரத்தனவின் வழிகாட்டலில் ஐ.ஜி.பி இளங்கோவன் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment