Monday, July 01, 2013
இலங்கை::யாழ். (புலி)கூட்டமைப்பின் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சி. நிஷாந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, குறித்த விடுதியில் யாழ். பிரதேச செயலாளர் மற்றும் நிஷாந்தன் ஆகியோர், அவ்விடுதியில் இருந்த ஜோடியொன்றை பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த விடுதி உரிமையாளர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
அம்முறைப்பாட்டின் அடிப்படையில், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் சி. நிஷாந்தனைக் கைது செய்துள்ளதாகவும் இவரை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ். தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment