Monday, July 1, 2013

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஜுலை 09 ஆம் திகதி கூடுவது உறுதி!


Monday, July 01, 2013
இலங்கை::எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஜுலை 09 ஆம் திகதி கூடுவது உறுதியென குழுத் தலைவரும் சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் சர்வதேசமும் எத்தகைய அழுத்தங்களைப் பிரயோகித்தாலும் அரசாங்கம் தனது நிலைப்பாட் டினை நடை முறைப்படுத்து வதில் சிறிதும் சளைக்காதெனவும் அவர் கூறினார்.
தமிழ்க் கூட்டமைப்பு பங்குபற்றப் போவ தில்லையென அறிவித்திருக் கிறது. அது வொரு புதிய விடயமல்ல. எவர் வந்தாலும் வராவிட்டாலும் திட்டமிட்டபடி தெரிவுக்குழு கூடுமெனவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தற்போது 19 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். தெரிவுக் குழுவுக்கென ஒரு பேரவையுண்டு. எனவே எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளாதவிடத்தும்கூட எமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்ற சபாநாயகரினால் தெரிவுக்குழு நியமிக் கப்பட்டது. இதில் ஆளும் கட்சி சார்பில் 19 பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். இவற்றை தவிர எதிர்க்கட்சிகள் சார்பில் 12 உறுப்பினர்களை நியமிக்குமாறு தெரிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள் ளோம். இதற்கு மேலதிகமாக எம் மால் எதனையும் செய்ய இயலாது.
 
தெரிவுக் குழுவினை எதிர்க்கட்சி கள் பகிஷ்கரித்தாலும், பேரவை யினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எம்மிடம் இருக்கும் 19 உறுப்பினர்களும் போதுமானவர்க ளாவர் எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே. வி. பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்ட மைப்பு ஆகியன பாராளுமன்றத் தெரிவுக் குழுவினை பகிஷ்கரித்து ள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஒருதலை ப்பட்ச மான தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளதென அரசாங்கத்தை குற் றம் சுமத்தும் நோக்கிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளு மன்றத் தெரிவுக் குழுவுக்கு சமுக மளிக்காது பகிஷ்கரிப்பதாக வீட மைப்பு பொறியியல் மற்றும் நிர்மா ணத்துறை அமைச்சர் விமல் வீர வன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை ஓரங்கட்டுவதன் மூலம் ‘விரிவினை வாதம்’ ஒன்றே தான் அனைத்து க்குமான தீர்வு என்பதனை கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கள் அப்பாவி தமிழ் மக்களின் மனதில் திணிக்க முயற்சிக்கின்றனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் எத்தகைய தீர்மானத்தை முன்னெடுத்த போதிலும் பாராளு மன்றத் தெரிவுக்குழு திட்டமிட்டபடி கூடுவதில் எவ்வித மாற்றமு மில்லை. கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவில் பங்குபற்றி தமது கருத் துக்களை முன்வைக்காத விடத்து அரசா ங்கத்துடன் பேசுவதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை நழுவ விடுகின்றது என்றே கூற வேண்டுமெனவும் அமை ச்சர் விமல் இதன் போது கூறினார்.
கூட்டமைப்பு எம்.பிக்கள் தமது கருத்து மற்றும் நிலைப்பாட்டினை தெரிவுக்குழுக்கு முன்வைக்காத வரை அரசாங்கத்தினால் அவர்களது நிலைப்பாட்டினை புரிந்து கொள்ள முடியாமல் போகும். அத்துடன் எதற்குமே தீர்வுகிட்டாது எனவும் குறிப்பிட்டார்.
 
அரசாங்கத்துடன் உரிய முறையில் பேச்சு நடத்தி எதற்கும் நிரந்தர தீர்வு காண்பதனை விடுத்து எதனையும் பிரச்சினைகளாக உருவாக்கி தொட ர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே கூட்டமைப்பினரின் ஒரே விருப் பமாக இருக்கிறதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment