Saturday, June 01, 2013
மீனம்பாக்கம்::டெல்லியில் இருந்து இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஐ.மு. கூட்டணியில் திமுக 9 ஆண்டுகள் அங்கம் வகித்தது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில் இலங்கை பிரச்னை காரணமாக சிறு மனஸ்தாபத்தால் சமீபத்தில் ஐ.மு. கூட்டணியில் இருந்து திமுக விலகியது. மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகியது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் திரும்ப பெற்றுக் கொண்டது.
இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவை திமுக கேட்டுள்ளதா என்பது பற்றி உறுதியாக எனக்கு எதுவும் தெரியாது. அவ்வாறு திமுக தரப்பில் கேட்கப்பட்டால், அதுபற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி பரிசீலனை செய்து தகுந்த முடிவை அறிவிப்பார்கள். காவிரி நதிநீர் கண்காணிப்பு ஆணைய குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகளை கர்நாடகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அம்மாநில அரசு நிறைவேற்றும் என்று உறுதியாக நம்புகிறோம்.
ஏற்கனவே கர்நாடகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த மாநில அரசு, காவிரி பிரச்னையில் காவிரி நதிநீர் ஆணையம், பிரதமர், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றவில்லை. இதனால்தான் பிரச்னை அதிகமானது. ஆனால் தற்போதைய மாநில அரசு அதுபோன்று நடந்து கொள்ளாது என்ற நம்பிக்கை உள்ளது. பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு உயர்த்தப்பட்டதற்கு காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான். நமது நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணெயில் 87 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.
அங்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது இங்கும் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. விலை குறைந்தால் பெட்ரோல் விலையை பலமுறை குறைத்திருக்கிறோம். தமிழகத்தில் பால், மின்சாரம், பஸ் கட்டணத்தை மாநில அரசு பல மடங்கு உயர்த்தியது. அப்போது எதிர்க்கட்சிகளும், இங்குள்ள அமைப்புகளும் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு உயர்ந்தாலும் மத்திய அரசை கண்டித்து அறிக்கை விடுவது சரியல்ல.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளதால் பிசிசிஐயை மத்திய அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஒருசிலர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனால் இதுபற்றி எதுவும் கூற இயலாது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

ராஜ்யசபா தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என்பது பற்றி மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்தார்.
No comments:
Post a Comment