Wednesday, May 29, 2013
கனடா::தமிழ் வாக்காளர்களின் ஆதரவை திரட்டவே கனடா, இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது என இலங்கைக்கான கனடாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மார்டின் கொலாகொட் தெரிவித்துள்ளார்.
கனடா::தமிழ் வாக்காளர்களின் ஆதரவை திரட்டவே கனடா, இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது என இலங்கைக்கான கனடாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மார்டின் கொலாகொட் தெரிவித்துள்ளார்.
கனேடிய வாழ் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே தற்போதைய அரசாங்கம், பொதுநலவாய நாடுகள் தலவைர்கள் மாநாட்டை புறக்கணிக்க முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
உள்நாட்டு அரசியல் நோக்கங்களை இந்த விவகாரத்தில் மேலோங்கிக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டு காலப் பகுதியில் கொலாகொட் இலங்கையில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தின் பின்னர் மனித உரிமை நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டுமென எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை கனேடிய அரசாங்கம் மட்டும் புறக்கணிப்பது உள்நாட்டு அரசியலை கருத்திற் கொண்டே என தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment