Wednesday, May 29, 2013
சென்னை::தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தேமுதிக சட்டசபை உறுப்பினர் சாந்தி சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேமுதிகவைச் சேர்ந்த 4 சட்டசபை உறுப்பினர்கள் ஏற்கெனவே ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர். இது தேமுதிக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அவர்கள் தேமுதிகவில் தொடர்ந்தாலும், கட்சிப் பணிகளில் கலந்து கொள்ளாமல் விலகியே உள்ளனர்.
இந்நிலையில் சேந்தமங்கலம் சட்டசபை உறுப்பினர் சாந்தி இன்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். தமது தொகுதிப் பிரச்சனை குறித்து முதல்வரைச் சந்தித்து மனு கொடுத்ததாகப் பின்னர் அந்த பெண் எம்எல்ஏ தெரிவித்தார்.
நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலையொட்டி, இத்தகைய சந்திப்புகள் நடப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment