Sunday, May 26, 2013

அமெரிக்காவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும் புலிகள் அழிக்கப்படுவதற்கு உதவிய நாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும்: இரா.சம்பந்தன்!

Sunday, May 26, 2013
இலங்கை::தமிழ் மக்களது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் சென்றுள்ளது. 2 கிலே மீற்றர் வீதிக்காக எமது கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது. இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கட்சியின் திருகோணமலை மாவட்ட பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  நியு சில்வர் ஸ்டார் விடுத்தியில் நடைபெற்றது.

தேர்தல் பணிகளக்காக முகவர்களை நியமித்தல், கட்சி கிளை புனரமைப்பு. தற்கால அரசியல் நிலை என்பன தொடர்பாக விளக்குவதற்கு இக்கூட்டம் கூட்டப்பட்டது.

தலைவர் சம்பந்தன் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையில்:-

சம்பூர் பிரதேசத்தில் அனல் மின் நிலையத்திற்காக எடுக்கப்பட்ட 50 ஏக்கர் காணி தவிர எனைய பகுதிகள் விடவிக்கப்படும் என பசில் ராஜபக்ஷ எனக்கு வாக்குறதி அளித்திருந்தார்.

ஆனால் வாக்குறிதியை மீறி அங்கு நடவடிக்கைகள் எக்கப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வடமாகாணத்தில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்தார்.

நான் அவர்களோடு பேசுவதற்கு தயாராக இல்லை. அவர்கள் அரசாங்கம் அல்ல. பன்முகப்படுததப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியாக கிடைத்த 5 மில்லியன் ரூபாய்கள் 11 கோயில்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

புலிகள் அழிக்கப்படுவதற்கு உதவிய நாடுகள் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும். இது அமெரிக்காவாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் எமக்கு தீர்வை பெற்றுத் தரவேண்டும். அவர்களக்கு ஒர கடமைப்பாடு உள்ளது.

அரசாங்கத்தோடு இணைந்திருந்தால் 100 மில்லியன் ரூபாய்கள் வரை அபிவிருத்திக்காக கிடைக்கும். இதற்காக எமது கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாது. என சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment