Tuesday, May 28, 2013

பிரபாகரன் என்ற மாபெரும் கொலைகாரனுடன் ஆயரை ஒப்பிடலாமா?.

Tuesday, May 28, 2013
இலங்கை::பிரபாகரனுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று மன்னார் ஆயர் ராயப்பு யோசப்பு கூறியதை புலிகளின் ஊடகங்கள் பிரபாகரன் ஏதோ பெரிய சிறந்த மனிதன்,அதனால் என்னுடன் ஒப்பிடவேண்டாம் என்ற கருத்துப்பட ஆயர் கூறியதாக எல்லா உதயன் உட்பட இணையதளங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. பிரபாகரனுடன் தன்னை ஒப்பிடுவதை அறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். கொலை கொள்ளை என்று ஆரம்பித்து பின்னால் உலக மகா பயங்கரவாதியாக உலக நாடுகளால் இனங்காணப்பட்ட ஒரு மாபெரும் பயங்கரவாதியை ஒரு சாதாரண குடிமகனுடன் கூட ஒப்பிட்டால்கூட  அவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். அப்பேற்பட்ட ஒரு கொலைகாரனை ஆயருடன் ஒப்பிட்டால் அவர் ஏற்றுக் கொள்வாரா?
 
இது ஆயரையும் வத்திக்கானையும் அவமதிப்பது போலல்லவா! கொலை,கொள்ளைகள் செய்து ஒருவன் பயங்கரவாதியாக முடியும்! ஆயராக முடியுமா?ஒரு ஆயராவதற்கு எவ்வளவு தகுதிகள் வேண்டும்.
பிரபாகரன் ஒரு மனநோயாளி. கொலை மட்டும்தான் அவனுடைய சிறப்பு. பொட்டு அம்மானைத் துணைக்கு வைத்துக் கொண்டு அவன் சிறப்பாகச் செய்து முடித்தது கொலைகள் மட்டும்தான்.பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில் இலங்கை முழுவதும் கொலைகள்,மனித வெடிகுண்டுகள், எல்லாம்  சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. Ruthless Terrorist என்று உலக நாடுகளால் அழைக்கப்பட்ட ஒரு கொலைகாரனை ஆயருடன் ஒப்பிட்டால் அவர் ஏற்ருக் கொள்வாரா? ஆனால் அவர் பிரபாகரனுடன் தன்னை ஒப்பிடவேண்டாம் என்று சொன்னதை திரிபுபடுத்தி பிரபாகரன் தன்னை விடச் சிறப்பானவர்,அவருடன் தன்னை ஒப்பிடவேண்டாம் என்று சொன்னது போல புலிப்பினாமிகளின் ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.
 
நாளொன்று பொழுதொன்று என்ற் எத்தனை கொலைகள்,எத்தனை பெண்களை விதவையாக்கை,எத்தனை பிள்ளைகளை அனதையாக்கி, எத்தனை பிள்ளைகள பெற்றோர்களிடமிருந்து பறித்துச் சென்று யுத்தமுனையில் பலி கொடுத்து, தமிழ் மக்காளை மனிதக் கேயமாக வைத்து இத்தனை ஆயிரம் உயிர்களை பலி கொடுத்த ஒரு யுத்த வெறியனைத் தன்னுடன் ஒப்பிட்டால் ஆயர் ஏற்றுக் கொள்வாரா? பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்தில் அவனுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ளவர்கள் அனைவரும் பிரபாகரனுக்கும் கட்டுப்பட்டிருந்தனர். அப்படியானவர்களில் ஆயர் ராயப்பு யோசப்புவும் ஒருவர். இல்லையென்றால்  ஆயரும்   பாக்கியரஞ்சித், கருணாரத்னம் பாதிரிமார்கள் போல ஆழ ஊடுரும் படையணித் தாக்குதலில்  பிரபாகரனால் கொல்லப்பட்டு நாட்டுப்பற்றாளர் பட்டம் பெற்றிருப்பார்.      பிரபாகரன் கொல்லப்பட்டதையிட்டு இலங்கைத் தமிழ் மக்கள் எந்தக் கவலையும் கொள்ளவில்லை. அப்படியிருக்கையில் பிரபாகரனைச் சிறந்த மனிதனாக்கி பிழைப்பிழந்துபோன ஊடகங்கள் பெருமை கொள்கின்றன.

No comments:

Post a Comment