Wednesday, May 01, 2013
US::இலங்கைக்கான உதவியை அமெரிக்கா வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீதி அமைச்சிற்கு வழங்கப்பட்ட நிதி உதவித் தொகையே இவ்வாறு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா பணம் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வினைத்திறனின்மை மற்றும் கவனயீனம் காரணமாக இந்த உதவு தொகை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீதி அமைச்சு அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கவனயீனம் காரணமாக இந்த உதவு தொகை இழக்கப்பட்டுள்ளது. நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவு தொகை வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகளுடன் உரிய இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தினல் உதவு தொகை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உதவு தொகை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதனை அமெரிக்கத் தூதரகம் உறுதி செய்துள்ளது.
நீதிமன்றக் கட்டமைப்பின் பல்வேறு துறைகளை மும்படுத்தும் நோக்கிலேயே இந்த உதவு தொகை வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை, குறித்த உதவு தொகை வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும் மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சின் செயலாளர் கமாலீனி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த உதவு தொகை தொடர்பில் பொருளாதார அமைச்சே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், உதவு தொகை மீள அளிக்கப்பட மாட்டாது என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment