Monday, May 27, 2013

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

Monday, May 27, 2013
சென்னை::இதில் 71,271 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.83 ஆகும். கடந்த ஆண்டு 90.59 சதவீத தேர்ச்சி இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 5430 மாணவர்களும் 3808 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 5207 மாணவர்களும், 3698 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.40 சதவீதமாகும். கடந்த ஆண்டு 95.57 சதவீத தேர்ச்சியை தமிழகம் பெற்றிருந்தது. புதுச்சேரியை பொறுத்தவரை 165 மாணவர்களும் 95 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 160 மாணவர்கள், 93 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 97.31. கர்நாடகாவை பொறுத்தவரை 3,707 மாணவர்களும், 2837 மாணவிகளும் தேர்வு எழுதினர்.

இதில் 3,602 மாணவர்களும் 2,774 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 97.43. மகாராஷ்டிராவை பொறுத்தவரை 6,281 மாணவர்களும் 4,966 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 5,818 மாணவர்களும், 4739 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.87. தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்கான தேர்வுகள் ஜூலை 16ம் தேதி நடத்தப்படும். அதற்காக விண்ணப்பம் அனுப்ப விரும்புவோர் ஜூன் 21 க்குள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மறு கூட்டல், விடைத்தாள் மறு ஆய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சென்னை கீழ்பாக்கம் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளி மாணவி வர்ஷா விவேக் என்பவர் 500க்கு 494 மதிப்பெண்களும் காயத்ரி என்பவர் 500க்கு 491 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
 
சி.பி.எஸ்.இ 12 ம் வகுப்பு தேர்வில் தமிழகம் 96.40 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டு சி.பி.எஸ்.சி தென்மண்டல இயக்குனர் சுதர்சனராவ் அளித்த பேட்டி: சி.பி.எஸ்.இ தென்மண்டலத்தை உள்ளடக்கிய ஆந்திரா, அந்தமான், நிகோபார், டையூ, டாமன், கோவா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள், மகாராஷ்டிரா, புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தம் 77,616 மாணவ மாணவிகள் சி.பி.எஸ்.இ 12 ம் வகுப்பு தேர்வு எழுதினர். மார்ச் 1 ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன.

No comments:

Post a Comment