Saturday, April 6, 2013

தீய சசக்திகளிடமிருந்து எனது கட்டுப்பாட்டில் இருக்கும் உங்களை பாதுகாப்பது எனது பொறுப்பு – கம்பஹா பொலிஸ் SSP!

Saturday,April 06,2013
இலங்கை::திஹாரிய வாழ் முஸ்லிம் மிகவும்   ஒற்றுமையாக எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல், பள்ளிவாசல் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வரும் ஒரு சமூகம் என்பது நான் நன்கு அறிந்தவன் என கம்பஹா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி (SSP) விஜித டீ கொமசார் தெரிவித்துள்ளார்.
சமகாலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பாக கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் தலைமயில் இன்று இஷா தொழுகையை தொடர்ந்து திஹாரிய மஸ்ஜிதுல் ரவ்ழா பள்ளிவாசலில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே இவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய அவர்:
கடந்த 12 வருடங்களுக்கு மேலாலக திஹாரிய வாழ் முஸ்லிம் மக்கள் எனக்கு நன்கு பரீச்சயம் ஆனவர்கள். நான் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் காலத்தில் திஹாரியில் நடைபெற்ற சில பிரச்சினைகளை  தீர்த்துவைக்க எனக்கு இந்த ஊர் மக்களும் பள்ளிவாசல்களும் பெரும் உதவியாக இருந்தது. நீங்கள் அனைவரும் எவ்வளவு ஒற்றுமையாக  இருக்கின்றீர்கள் என்பது தற்பொழுது இந்த வணக்கஸ்தலத்தில் இருப்பதை பார்க்கும் பொழுது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தற்பொழுது நான் பதவி உயர்வு கிடைத்து கம்பஹா பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக உங்கள் முன் வந்திருக்கிறேன்.
இதேவளை தற்பொழுது முஸ்லிம்களை இலக்குவைத்து சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றது. அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது. இந்த தீய சக்திகளின் நடவடிக்கைகளில் எனது கட்டுப்பாட்டில் உள்ள உங்களை பாதுகாப்பது எனது பொறுப்பு. இதற்கான நடவடிக்கைகளை நான் முன்னேடுத்துள்ளேன். இதன் முதல் கட்டமாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இன்று முதல் 24 மணிநேரம் சேவையில் இருப்பார்கள். திஹாரிய வாழ் முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அவர்களுக்கு அறிவியுங்கள். அவர்கள் செயற்படாவிட்டால் உடனடியாக எனக்கு அறிவியுங்கள். எனது  தொலைபேசி இலக்கத்தினை பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment