Sunday, April 14, 2013

நிபுணத்துவம் வாய்ந்த இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

Saturday, April 13, 2013
இலங்கை::நிபுணத்துவம் வாய்ந்த இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையை வரையறுத்து அதற்கு பதிலாக இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
குறிப்பாக கொழும்பு துறைமுகப் பகுதியில் 800 நிபுணத்துவம் வாய்ந்த இந்தியப் பணியாளர்கள் கடமையாற்றி வருவதாகவும், இவர்களுக்கு பதிலாக இலங்கையர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும்
தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
 
இலங்கைத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், போதியளவு நிபுணத்துவம் கொண்ட இலங்கைப் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்குவதே தமது எதிர்பார்ப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்தியாவுடன் குறிப்பாக தமிழகத்துடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சர் லொக்குகே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment