Saturday, April 27, 2013
இலங்கை::வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் ஷர்மாவை நேற்று லண்டனில் சந்தித்துள்ளார்.
இந்த வருடத்தின் நவம்பர் மாதமளவில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிற்கான ஆயத்தங்கள் குறித்து இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள மூன்று பிரதான விடயங்கள் தொடர்பாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்துள்ளார்.
கொழும்பில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ள வர்த்தக பிரதிநிதிகள் சந்திப்பு, ஹம்பாந்தோட்டை இளைஞா் சந்திப்பு மற்றும் தம்புள்ளை மக்கள் சந்திப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் கமலேஷ் ஷர்மாவுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment