Sunday, April 14, 2013

தமிழ் புத்தாண்டு மலர் : விஜய ஆண்டு எப்படி இருக்கும்?,

Saturday, April 13, 2013
சென்னை::எல்லா நாளும் இனிய நாளாகட்டும் : வாழ்த்துகிறார் கமலானந்தர்:*
 
இறைவனின் அருள் இருந்தால் உலகில் எதையும் சாதிக்க முடியும். இதைத் தான், "முன்னவனே முன் நின்றால் முடியாதது எதுவுமில்லை,'' என்று குறிப்பிடுவர். விதிக்கும் விதி செய்பவன் இறைவனின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
* பசுவின் உடல் முழுதும் பால் இருந்தாலும், அதன் மடியிலிருந்து பாலைக் கறப்பது போல, இறையருளை நமக்கு அருளும் இடமாக கோயில்கள் இருக்கின்றன. அதனால், வாரம் ஒருமுறையாவது கோயில் வழிபாடு செய்ய
வேண்டியது அவசியம். புத்தாண்டில் இந்த வழக்கத்தை ஆரம்பியுங்கள்.
* "அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்று பெரியவர்கள் சொல்வார்கள். இறையருளே நம்மை வழிநடத்திச் செல்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், இந்த புத்தாண்டின் எல்லாநாட்களும் இனிய நாட்களாக அமைந்திடும்.
* இறைவனின் கையிலுள்ள கருவியாக செயல்படுங்கள். அவரிடம் முழுமையாகச் சரணடையுங்கள். அப்போது உங்களின் சொல், செயல் அனைத்தும் இறைவனின் பேச்சாகவும், இறைச் செயலாகவும் மாறிவிடும்.
* தினமும் மனம் ஒன்றி பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். இதன் மூலம் நாம் எதை பெற விரும்புகிறோமோ அதையெல்லாம் பெற்று வாழ்வில் உயர முடியும். கள்ளம் கபடம் இல்லாத குழந்தை உள்ளத்துடன் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டியது அவசியம்.
அறுசுவை உணவு:
 
தமிழ் புத்தாண்டு நாளில் உணவில் அறுசுவையும் சேர்த்துக் கொள்வர்.இனிப்புக்காக அதிரசம், காரத்திற்காக கார வடை, புளிப்புக்காக மாங்காய் பச்சடி, உவர்ப்புக்காக முறுக்கு வத்தல், துவர்ப்புக்காக வாழைப்பூ மசியல், கசப்புக்காக வேப்பம்பூப் பச்சடி ஆகிய உணவுகள் மதிய உணவில் இடம்பெறும். நாள் என்றால், பகலும் இரவும் சேர்ந்திருப்பது போல, வாழ்வில் இன்ப துன்பம் என்று இருவித அனுபவமும் உண்டு. இனிப்பை மட்டும் சாப்பிட்டால் ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்படும். அதற்கு மாற்றாக காரம் சேர்க்கிறார்கள். இன்ப, துன்பம் இரண்டையும் சமமாக கருத வேண்டும் என்பதைக் குறிக்கவே, அறுசுவையையும் உணவில் இடம்பெறச் செய்தனர்.
கை நீட்டினா காசு கிடைக்கும் :
 
குருவாயூர் கோயிலுக்கு புத்தாண்டுக்கு முதல்நாள் இரவே பக்தர்கள் சென்று காத்திருப்பார்கள். அதிகாலை நடை திறந்ததும் குருவாயூரப்பனைத் தரிசிப்பர். அப்போது ஏழை, பணக்காரர் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் கைநீட்டமாக கோயில் சார்பாக காசு வழங்குவர். இதற்கு "கைநீட்டம்' என்று பெயர். புத்தாண்டு அதிகாலையில் விஷூ கனி தரிசனம் செய்த பின், வீட்டு பெரியவர்களும் இளையவர்களுக்கு பணம் கொடுக்கலாம். இந்தக் காசை அநாவசியமாக செலவழிக்காமல் தர்மகாரியங்களுக்கும், கோயில்களுக்குச் செல்லவும் பயன்படுத்துவது புண்ணியம் தரும்.
ராஜயோகம் தரும் ராஜகுரு :
 
விஜய புத்தாண்டின் ராஜாவாகத் திகழ்பவர் குரு. இவ்வாண்டில், அவர் அருள்பாலிக்கும் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று வரலாம்.
தல வரலாறு:
 
ஒருமுறை உலகம் தண்ணீரால் அழிந்தது. ஆனால், குறிப்பிட்ட சில தலங்கள் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் கடலுக்குள் இருக்கும் தீவுகள் போல் திட்டு திட்டாக காட்சி தந்தன. அப்படி திட்டாக நின்ற ஒரு இடமே தென்குடித்திட்டை. திட்டாக இருந்ததால் "திட்டை' என்று பெயர் வந்தது. இங்கிருந்த ஒரு மேட்டில், சிவன் லிங்க வடிவில் எழுந்தருளினார். தானாக தோன்றிய இவருக்கு "தான்தோன்றீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.பாற்கடலைக் கடைந்து அமுதம் வெளிப்பட்ட போது, யாருக்கும் தெரியாமல் ஒரு அசுரன் அதைக் குடித்தான். அவனை சூரியன் காட்டிக் கொடுத்தார். கோபத்தில் திருமால் அவனை வெட்டினார். அவன் இரு துண்டுகளாகி ராகு, கேது என்று பெயர் பெற்றான். இவர்களில் ராகுவின் மகனும், சிவபக்தனுமான சுமாலி, தன் தந்தையைக் காட்டிக்கொடுத்த சூரியன் மீது, பகை கொண்டான். இருவருக்கும் சண்டை நடந்தது. சூரியன் சுமாலியைக் கொன்று விட்டார். சிவபக்தனைக் கொன்ற தோஷம் சூரியனை ஒட்டிக் கொண்டது. இங்கு வந்த சூரியன், சிவனை வணங்கி விமோசனம் பெற்றார். வசிஷ்ட மகரிஷி வழிபட்டதால், சுவாமிக்கு வசிஷ்டேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டு, இப்பெயரே வழக்கில் உள்ளது.
ராஜயோகம்:
 
இங்குள்ள உலகநாயகி அம்மன் சந்நிதிக்கு வலப்புறம் தனி விமானத்துடன் கூடிய சந்நிதியில் குரு இருக்கிறார். நவக்கிரகங்களில் ராஜ அந்தஸ்து பெற்றதால் குருவுக்கு, "ராஜகிரகம்' என்று பெயர். இதனால் இவரை, "ராஜ குரு' என்கிறார்கள். மனிதர்கள் வாழத் தேவையான பொருளைத் தருவதால் இவரை தனகாரகன் என்பர். இவரை வழிபட ராஜயோகம் கிடைக்கும்.
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் 10 கி.மீ.,திறக்கும் நேரம்: கலை 7- மதியம் 1, மாலை 4- இரவு 8.30.போன்: 04362- 252 858.
விஜய ஆண்டு எப்படி இருக்கும்?
 
உங்கள் நட்சத்திரத்தின் அடிப்படையில் விஜய புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை மாதவாரியாக பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர். அதை தெரிந்து கொள்வோமா!

அசுவினி: சித்திரை- ஆடி வரை சிரமம், ஆவணி- கார்த்திகை வரை சுமாரான பணவரவு,
மார்கழி-பங்குனி வரை யோகம்.
பரணி: சித்திரை- ஆடி வரை யோகம், ஆவணி- கார்த்திகை வரை சுமாரான பணவரவு மார்கழி-பங்குனி சிரமம்.
கார்த்திகை: சித்திரை- ஆடி வரை ராஜயோகம்,
ஆவணி- கார்த்திகை வரை சிரமம், மார்கழி- பங்குனி வரை ஆரோக்கியம்.
ரோகிணி: சித்திரை- பங்குனி வரை சுமாரான பணவரவு, ஓரளவு ஆரோக்கியம்.
மிருகசீரிடம்: சித்திரை- ஆடி வரை ராஜயோகம்,
ஆவணி- கார்த்திகை வரை சுமாரான பணவரவு, மார்கழி-பங்குனி வரை ராஜயோகம்.
திருவாதிரை: சித்திரை- ஆடி வரை மகிழ்ச்சி, ஆவணி- கார்த்திகை வரை சிரமம், மார்கழி-பங்குனி வரை சுமாரான பணவரவு
புனர்பூசம்: சித்திரை- கார்த்திகை வரை சுமாரான பணவரவு, மார்கழி-பங்குனி வரை சிரமம்
பூசம்: சித்திரை- ஆடி வரை யோகம், ஆவணி- கார்த்திகை வரை சுமாரான பணவரவு, மார்கழி-பங்குனி வரை செல்வவளம்
ஆயில்யம்: சித்திரை- கார்த்திகை வரை சிரமம், மார்கழி- பங்குனி வரை சுமாரான பணவரவு
மகம்: சித்திரை- ஆடி வரை மகிழ்ச்சி, ஆவணி- கார்த்திகை வரை லாபம், மார்கழி-பங்குனி வரை யோகம்
பூரம்: சித்திரை-ஆடி வரை யோகம், ஆவணி- கார்த்திகை வரை சுமாரான பணவரவு, மார்கழி- பங்குனி வரை லாபம்
உத்திரம்: சித்திரை- ஆடி வரை லாபம், ஆவணி- பங்குனி வரை ஆரோக்கியக்குறைவு, சுமாரான பணவரவு
அஸ்தம்: சித்திரை- ஆடி வரை லாபம், ஆவணி- கார்த்திகை வரை சிரமம், மார்கழி- பங்குனி வரை யோகம்
சித்திரை: சித்திரை- ஆடி வரை ராஜயோகம்,
ஆவணி- கார்த்திகை வரை லாபம், மார்கழி- பங்குனி வரை சுமாரான வரவு
சுவாதி: சித்திரை- ஆடி வரை மிதமான வரவு,
ஆவணி- கார்த்திகை வரை சிரமம், மார்கழி- பங்குனி வரை லாபம்
விசாகம்: சித்திரை- ஆடி வரை லாபம், ஆவணி- கார்த்திகை வரை சிரமம், மார்கழி- பங்குனி வரை மிதமான பணவரவு
அனுஷம்: சித்திரை- ஆடி வரை சிரமம், ஆவணி- கார்த்திகை வரை லாபம், மார்கழி- பங்குனி வரை பிரச்னை
கேட்டை: சித்திரை- ஆடி வரை லாபம், ஆவணி- கார்த்திகை வரை சிரமம், மார்கழி- பங்குனி வரை யோகம்
மூலம்: சித்திரை- ஆடி வரை ராஜயோகம், ஆவணி- பங்குனி வரை சுமாரான பணவரவு.
பூராடம்: சித்திரை- ஆடி வரை சுமாரான பணவரவு ஆவணி- கார்த்திகை லாபம், மார்கழி-பங்குனி லாபம், ஆரோக்கியம்.
உத்திராடம்: சித்திரை- ஆடி வரை ஆதாயம், ஆரோக்கியம், ஆவணி- கார்த்திகை வரை சிரமம், மார்கழி- பங்குனி வரை சுமாரான பணவரவு.
திருவோணம்: சித்திரை- ஆடி வரை யோகம், ஆவணி- கார்த்திகை வரை சுமாரான பணவரவு,
மார்கழி-பங்குனி வரை சிரமம்.அவிட்டம்: சித்திரை- பங்குனி வரை லாபம், ஆரோக்கியம், மகிழ்ச்சி.
சதயம்: சித்திரை- ஆடி வரை லாபம், ஆவணி- கார்த்திகை வரை சிரமம், மார்கழி-பங்குனி வரை சுமாரான பணவரவு.
பூரட்டாதி: சித்திரை- ஆடி வரை சிரமம், ஆவணி- கார்த்திகை வரை சுமாரான பணவரவு, மார்கழி-பங்குனி வரை லாபம்
உத்திரட்டாதி: சித்திரை- ஆடி வரை லாபம், ஆவணி-கார்த்திகை வரை சுமாரான பணவரவு, மார்கழி-பங்குனி வரை சிரமம்.
ரேவதி: சித்திரை-ஆடி வரை ராஜயோகம், ஆரோக்கியம், ஆவணி-பங்குனி வரை சிரமம்.

No comments:

Post a Comment