Monday, April 15, 2013

புல்லர் ரகசிய தூக்குக்கு ஏற்பாடு, பஞ்சாபில் முன்னெச்சரிக்கை!

Monday, April 15, 2013
பாட்டியாலா::தேவேந்தர் பால்சிங் புல்லரை ஜெயிலில் ரகசியமாக தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருவதை அடுத்து பஞ்காபில் பதற்றம் நிலவுகிறது. இதனால் பஞ்சாப் முழுவதிலும் பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் கடந்த 1993-ம் ஆண்டு கார் குண்டு வெடிப்பு மூலம் 9 பேரை கொன்ற காலிஸ்தான் தீவிரவாதி புல்லருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் குடியரசு தலைவர் புல்லரின் கருணை மனுவை நிராகரித்ததை அடுத்து அவரது தூக்கு தண்டனை உறுதி என்று கூறப்பட்டது.

எனினும் தூக்கை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரி புல்லர் உச்சநீதி மன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். இந்த முனுவும் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து புல்லரை காப்பாற்ற பல்வேறு சீக்கிய அமைப்புகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் படால், பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்திக்க உள்ளார். மறு ஆய்வு செய்ய கோரி சிரோமணி அகாலி தளம் கட்சியும் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் தேவேந்தர் பால்சிங் புல்லரை ஜெயிலில் ரகசியமாக தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புல்லரை தூக்கிலிடும் நாள் மற்றும் நேரத்தை சிறைத்துறை ரகசியமாக வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. புல்லரை தூக்கில் போட்டால் பஞ்சாபில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

இதையொட்டி பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இதையொட்டி பஞ்சாப் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் முழுவதும் துணை நிலை ராணுவ வீரர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment