Friday, April 5, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்த போதிலும், தமிழக சட்ட மன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதவரளிக்கப்படவில்லை:சல்மன் குர்ஷித்!

Friday, April 05, 2013
புதுடெல்லி::இலங்கை விவகாரத்தில் இந்தியா அதிகாரத்தைப் பணயம் வைத்து செயற்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டைச் சேர்ந்த சில கட்சிகள் இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் எது நியாயமானதோ அந்தத் தீர்மானத்தை மத்திய அரசாங்கம் எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்தத் தீர்மானத்தை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்த போதிலும், தமிழக சட்ட மன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதவரளிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை தொடர்ந்தும் நட்பு நாடாக கருத வேண்டாம் என தமிழகஅரசாங்கம் கோரியிருந்ததாகவும், இதனை மத்திய அரசாங்கம் ஏ
ற்கவில்லை எனவும் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment