Thursday, April 25, 2013

புலிகளுக்கு ஆதரவான சுடரொளி, உதயன் பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்: அமைச்சர் றிசாத் பதியுதீன்!

Thursday, April 25, 2013
இலங்கை::புலிகளுக்கு ஆதரவாக கொழும்பை மையமாகக் கொண்டு வெளிவரும் சுடரொளி மற்றும் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு வெளிவரும் உதயன் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக வன்னி மாவட் பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தீர்மானித்துள்ளதாக இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்
 
முல்லைத்தீவு முள்ளியாவலையில் அண்மையில் இடம் பெற்றதாக கூறப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் அங்கு சென்று காடுகளை அழிக்க முற்பட்டதாக உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமை, அவ்வாறு ஆரப்பாட்டம் இடம் பெற்ற இடத்துக்கு அமைச்சர் றிசாத் செல்லவில்லையென்றும் பொய்யான செய்தியினை பிரசுரித்து தமக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தியதற்கு எதிராக வழக்கொன்றும், ஞாயிற்றுக்கிழமை முள்ளியாவலியில் சில் குடிசைகள் எரிக்கப்பட்ட சம்பவத்தின் விசாரணைகள் முடிவுறாத நிலையில் அதற்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்புபட்டிருப்பதாக மற்றுமொரு செய்தியினை பிரசுரித்து, மக்களை பிழையாக வழிநடத்தியதுடன், இனக் கலவரத்தை துண்டுவதற்கு துாபமிட்டதாக தெரிவித்தே இந்த வழக்குகள் தொடரப்பட உள்ளன.
 
இது குறித்த தேவை கடிதம்(லெட்டர் டிமாண்ட) அமைச்சர் றிசாத் பதீயுதீனின் சட்டத்தரணி மூலம் உதயன் பத்திரிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு செய்திகள் மூலம் தமக்கு அவப் பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கென 200 கோடி ரூபா மான நஷ்டம் கோரவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment