Friday, April 26, 2013

ஆஸி. செல்ல முயன்ற இலங்கை அகதிகள் மீட்பு!

Friday, April 26, 2013
பெங்களூர்::ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக தமிழக முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் பெங்களூரூ துறைகத்தில் மீட்கப்பட்டனர்.
 
நேற்று இரவு திருவள்ளூர், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் உள்ள இலங்கைஅகதிகள் 68 பேர் பெங்களூரூ புத்தர் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். அவர்களை கர்நாடகா ‌போலீசார் தடுத்து விசாரித்தனர். விசாரணையில்அவர்கள் ஆஸ்திரேலியா செல்லமுயன்றது தெரியவந்தது.
 
இவர்களுக்கு உதவியதாகவும் அகதிகளிடம் ரூ. பல லட்சம் வரை வசூலித்தாகவும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வழியாக ஆஸி. செல்ல முயன்றதாக 100-க்கும் மேற்பட்டோர் தடுத்துநிறுத்தப்பட்டனர்.
 
 தமிழக கடலோரப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், இப்போது கர்நாடகா துறைமுகம் வழியாக செல்லமுயன்று சிக்கியுள்ளனர்.
 

No comments:

Post a Comment