Wednesday, April 17, 2013

அவுஸ்ரேலியாவினால் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் வெற்றி அளிக்காது: அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்!

Wednesday, April 17, 2013
மெல்பர்ன்::அவுஸ்ரேலியாவினால் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் வெற்றி அளிக்காது என்று அவுஸ்ரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
 
உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதன் ஊடாக அவுஸ்திரேலியாவின் கொள்கைகளை மாற்றியமைக்க அழுத்தம் பிரயோகிக்க முடியாது என அவுஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் தடுப்பு முகாமில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்பில் அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
 
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் நடைமுறையில் உள்ள கொள்கைகளை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதன் மூலம் மாற்ற முடியாது என்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் கூறியுள்ளார்.
படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் சென்று கைதுசெய்யப்பட்டு மெல்பர்ன் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பான அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி இலங்கை அகதிகள் 27 பேர் கடந்த பல தினங்களாக மெல்போர்ன் நகரில் உணவு தவிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment