Monday, April 8, 2013

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை தாக்குதல் 11 குழந்தைகள் பரிதாப சாவு கார் குண்டு வெடித்து 5 பேர் பலி!

Monday, April 08, 2013
காபூல்::ஆப்கனின் கிழக்கு பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து நேட்டோ படை நடத்திய விமான தாக்குதலில் 11 சிறுவர்கள், ஒரு பெண் பரிதாபமாக பலியாயினர். இன்னொரு இடத்தில் கார் குண்டு வெடித்ததில் 5 அமெரிக்கர்கள் பலியாயினர்.
ஆப்கனில் தலிபான், அல்கய்தா தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தீவிரவாதிகள்

இந்நிலையில், ஆப்கனின் கிழக்கு பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஷிகல் மாவட்டம் குனார் பகுதியில் நேற்று நேட்டோ படையினர் விமானத்தில் இருந்து குண்டுகளை வீசி தாக்கினர். குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் விழுந்து வெடித்ததில் சில வீடுகள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 11 குழந்தைகளும் ஒரு பெண்ணும் பரிதாபமாக பலியாயினர்.நேட்டோ நடத்திய விமான தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகள் 2 பேர் உள்பட 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் உள்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஆப்கனின் தெற்கு பகுதியான ஜாபூல் என்ற இடத்தில் நேற்று கார் குண்டு வெடித்தது. இதில் 3 அமெரிக்க வீரர்கள், ஒரு தூதரக அதிகாரி, அமெரிக்க ராணுவ துறை அதிகாரி என 5 பேர் உடல் சிதறி பலியானது குறிப்பிடத்தக்கது.
பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் ஆப்கன் ராணுவம் உதவியுடன் நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்த கூடாது என்று ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

No comments:

Post a Comment