Friday, March 01, 2013
இலங்கை::நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்த வியட்நாம் தேசிய சட்டமன்ற துணை தலைவp நகுயென் தி கிம்கான் தலைமையிலான தூதுக்குழுவென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் நேற்றுப் பிற்பகல் சந்தித்து உரையாடியது.
பயங்கரவாதப் பிடியிலிருந்து மீண்டெழுந்து துரித முன்னேற்றமடைந்துவரும்; இலங்கையைக் கண்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் இரு நாடுகளுக்கிடையில் உள்ள நல்லுறவுகள் மேலும் வலுப்பெறவேண்டும் என்றும் தூதுக் குழுவினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
இலங்கைக்கான தூதுவர் டொன் சின் தான்- இலங்கை பாராளுமன்ற செயலாளர் டபிள்யூ.பி.டி. தஸநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருனாதிலக அமுனுகம ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்கள் இச்சந்திப்பி;ல் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment