Saturday, March 30, 2013

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதால் தாய் நாட்டிற்கான சுதந்திரம் கிட்டியுள்ளது - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

Saturday, March 30, 2013
இலங்கை::குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டுக்குள் இன பேதத்தையும் மத பேதத்தையும் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் பொறுப்பை நிவைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் அனைத்து இன மக்களும் வாழ்கின்ற தாய் நாட்டிற்கான சுதந்திரமே கிட்டியதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பேருவளை பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் குரோதத்தை ஒழித்து எதிர்கால சந்ததியினருக்காக சமாதானமும் நல்லிணக்கமும் நிறைந்த நாட்டினை உருவாக்குவதற்கு வைகோர்க்க வேண்டியது அனைவரினதும் கடமை
எனவும் கூறியுள்ளார்.

சகல மக்களும் பாதுகாக்கப்படுவார்கள்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

இன, மத, பேதம் ஆகியவை தெடர்பான பிரச்சினைகள் ஏற்பட அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்;.


பேருவளையில் நேற்றிடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நாடொன்றின் ஒழுக்கம் மிக முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சகல இன மக்களையும் பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பு எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment