Saturday, March 2, 2013

இலங்கைக்கு எதிரான குழுக்கள் குரோத மனப்பான்மையுடன் செயற்படுகின்றன - ரவிநாத் ஆரியசிங்க!

Saturday, March 02, 2013
ஜெனீவா::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரால் நேற்று வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கை தொடர்பில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு எழுத்து மூலமும் நேரடியாக சந்தித்தும் இலங்கை தொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துகள் குறித்து அதிருப்தி தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செயற்பாடுகளை மனித உரிமைகள் பேரவையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக எடுத்துக் காட்டுவதற்கு இலங்கைக்கு எதிரான குழுக்கள் குரோத மனப்பான்மையுடன் முற்படுவதாக பேரவையின் தலைவருக்கு தாம் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ரவிநாத் ஆரியவங்ச தெரிவித்தார்.

அத்துடன் அரசியல் இலாபம் கருதியும் இலங்கையை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் முயற்சியாகவும் இது அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இலங்கை தொடர்பிலான காணொளி மனித உரிமைகள் ரேவையின் அறையொன்றில் காண்பிக்கப்படுகின்றமை எந்த வகையிலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்புபட்ட விடயமல்ல என பேரவையின் தலைவர் எழுத்து மூலம் தனக்கு அறிவித்துள்ளாக இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment