Saturday, March 2, 2013

“நோ பயர் சோன்” திரைப்படத்தை ஜெனீவாவில் திரையிடுவதிலிருந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விலகிக்கொண்டுள்ளது!:-சனல் 4 காணொளிக்கும் எமக்கும் எந்த தொடர்புமில்லை: ஐ.நா. மனித உரிமை பேரவை தெரிவிப்பு!

Saturday, March 02, 2013
ஜெனீவா::மனித உரிமைக் கண்கானிப்பகம், அம்நெஸ்டி இன்டர்நெசனல் மற்றும் எப்.ஐ.எப்.டீ.எச் போன்ற அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (மார்.1) ஜெனீவா கூட்டத் தொடரில் திரையிடவிருந்த “நோ பயர் சோன்” என்ற திரைப்படத்தை திரையிடுவதிலிருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது விலகிக்கொண்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை, ஐ.நா. தூதரகத்துக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவீந்ர ஆர்யசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை கூட்டமொன்று கூட்டப்பட்டது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரெமிஜியஸ் ஏ ஹென்சல் பெப்ரவரி 27ஆம் திகதி எழுதிய கடிதத்தில் இவ்வாரான நிகழ்வுகள் சபையின் நிர்வாக நடவடிக்கைகளில் பிரதிபலிப்பை ஏற்படுத்தக்கூடாதென குறிப்பிட்டிருந்தார்.

பொருளாதார மற்றும் சமூக சபைகளின் தீர்வு, 1996/31,25ஆம் திகதி ஜூலை 1996 மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் அவதானிப்புகள் (சபையின் 7ஆம் இலக்க நடைமுறைச்சட்டம்’) போன்றவை தொடர்பாக சர்வதேச நிறுவணங்கள் அடங்கலாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பார்வையாளர்கள் தொடர்பாக தலைவர் ஹென்சல் அவதானம் செலுத்தி இருந்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பெரும் தொகையானோர் பங்கேற்கும் ஒரு கூட்டத்தொடரில் இவ்வாரான நிகழ்வுகள் நிர்வாகரீதியில் பொருத்தமானதல்ல என்றார்.

இலங்கை, கடந்த திங்களன்று அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்படவுள்ள திரைப்படத்துக் கெதிராக எதிர்ப்பைக்காட்டியது. ஐ.நா தலைவர் தனது கடிதத்தில் திரைப்படத்தின் பொருத்தமற்ற நேர முகாமைத்துவம் தொடர்பாகவும் குறிப்பட்டிருந்தார்.

சனல் 4 காணொளிக்கும் எமக்கும் எந்த தொடர்புமில்லை: ஐ.நா. மனித உரிமை பேரவை தெரிவிப்பு!

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்திருக்கும் ‘போர் தவிர்ப்பு வலயம்’ எனும் காணொளியை காட்சிப்படுத்துவதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

அரசசார்பற்ற நிறுவனங்களான சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் எவ்.ஐ.எவ்.டி.எச். ஆகிய அமைப்புக்களே ஜெனீவாவில் இந்தக் காணொளியை காட்சிப்படுத்துவதாக மனித உரிமைகள் பேரவை கூறியிருப்பதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர தூதரகம் அறிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்திருக்கும் காணொளி ஜெனீவா மனித உரிமை பேரவை வளாகத்தில் காண்பிக்கப்படுவதற்கு ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க எழுத்துமூலமாகத் தனது எதிர்ப்பினை மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்குத் தெரிவித்திருந்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்பு நாடொன்றுக்கு எதிரான காணொளிக் காட்சியை அரசசார்பற்ற நிறுவனங்கள் காண்பிப்பதற்கு எடுக்கும் முயற்சியானது ஐ.நா. சாசனத்தை மீறும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி காண்பிக்கப்படுவதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூறியுள்ளது.

No comments:

Post a Comment