Friday, March 29, 2013

நாட்டின் உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதனை அனுமதிக்க முடியாது: 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலம் வடக்கில் ஈழ இராச்சியமொன்றை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது: குணதாச அமரசேகர!

Friday, March 29, 2013

இலங்கை::வடக்கில் மாகாணசபை அமைத்தால் அதன் ஊடாக வடக்கில்  ஈழம் உருவாகும்  தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வின் ஊடாக் நாட்டை பிளவுபடுத்த சில சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன. இந்த சதி முயற்சிக்கு இடமளிக்கப்படக் கூடாது. வடக்கில் மாகாணசபை அமைப்பதானது ஈழ இராச்சியத்தை உருவாக்குவதற்கான பாதையாக கருதப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வினை நோக்கி நாட்டைத் தள்ளுவதே அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நோக்கமாக அமைந்துள்ளது. நாட்டின் உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதனை அனுமதிக்க முடியாது. 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலம் வடக்கில் ஈழ இராச்சியமொன்றை உருவாக்க முயற்சிக்கப்படுகின்றது.

வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டும். அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துமாறு கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கும். இதனால் நாடு பிளவடையக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment