Thursday, February 28, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்கபோவதில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில், ஆணையாளர் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு அரசியல் ரீதியான மகிழ்ச்சியையோ, இலாபத்தை பெறபோவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இது முழு நாடும், மக்களும் எதிர்நோக்கும் அபாக்கியமான நிலைமையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
போருக்கு பின்னர், நாட்டுக்கு சுவர்ணமயமான காலம் கனிந்து வந்த போதிலும் செயற்படுத்தப்படும் கொள்கைகள் காரணமாக அதன் பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளும் போது, தூரநோக்கத்துடன் செயற்படாத அரசாங்கம், சர்வதேச சமூகத்தை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டது.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் இலங்கை பிரதிநிதிகளின் தலைவர், அந்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னரே தெரிவுசெய்யப்பட்டார். பேரவையின் கூட்டத்தை எதிர்கொள்ள அரசாங்கம் முன்கூட்டியே தயாராக இருக்கவில்லை எனவும் கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment