Wednesday, February 27, 2013

சந்தையில் விடப்பட்டுள்ள பாலச்சந்திரன் : சனல் 4 தொலைக்காட்சியின் மற்றுமொரு வியாபார யுக்தி!


Wednesday, February 27, 2013
இலங்கை::இலங்கையில் சமாதானம் நிலைப்பெற்று நான்கு ஆண்டுகளை அன்மித்துள்ள நிலையில் மக்கள் அச்சம், பீதியின்றி தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் இத் தருவாயில் நாடு முன்னெப்போதும் இல்லாதவாறு துரித முன்னேற்றம் அடைந்துவருவதை கண்கூடாகக் காணக்கூடியதாகவுள்ளது.

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுமானால் தமக்கு பாரிய அச்சுறுத்தலாகவும் இதுவரைகாலமும் தாம் அனுபவித்துவந்த சுகபோகத்தையும் வருமாணத்தையும் முற்றாக இழக்க நேரிடும் என்ற பீதியில் ஒரு சில இனத் துரோக எச்சங்கள் இலங்கைக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் இலங்கையில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி அதில் தொடர்ந்தும் குளிர்காய முனைந்து வருகின்றனர். இதில் ஒர் அங்கமே சில அரச சார்பற்ற நிறுவனங்களையும், சமாதானத்திற்கு எதிரானவர்களையும் ஒன்று திரட்டி இலங்கைக்கெதிராக முன்வைக்கப்படும் இவ்வாரான திரிவுபடுத்தப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களாகும்.

இதன் ஓர் அங்கமாகவே போலியான, உண்மைக்குப்புறம்பான நிகழ்வுகளை உண்மையிலே இடம்பெற்ற நிகழ்வுகள் போன்று, தொழிநுட்ப யுக்திகளைக் கையாண்டு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளையும் ஆவணப்படங்களையும் தயாரிப்பதில் உலகில் பிரபல்யம் பெற்று விளங்கும் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவையின் புதிய வியாபார யுக்தியே பாலச்சந்திரனின் புகைப்படங்கள். பதுங்கு குழியொன்றில் உயிரோடு வைக்கப்பட்டிருந்த காட்சியையும், நிலத்தில் இறந்து கிடப்பதாகவும் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய இப்புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் உலக அரங்கில் இலங்கையைத் தனிப்படுத்தி சமாதானத்தை சீர்குழைத்து தமது முதலாளிகளின் “இருப்பை” உறுதிப்படுத்த முனைந்துள்ளது.

இதுவரை காலமும் புலிகள் மேற்கொண்ட இன அழிப்புக்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் குறித்து சிறிதளவேனும் சிந்தித்து வேதனைப்படாத இத்துரோக சக்திகள் ஜெனீவாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு முன்னர் போலி ஆவணங்களை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மார்ச் மாதம் நெருங்கும் போது வதந்திகளையும், கட்டுக் கதைகளையும் பரப்பி இலட்சக்கணக்கான டொலர் நோட்டுகளை அபகரிக்கும் கொடிய இனத்துரோக சக்திகள் அசுர வேகத்தில் செயற்பட ஆரம்பிக்கின்றன.

இந்தியாவில் பிரபல்யமான இந்து பத்திரிகை கூட, பாலச்சந்திரனின் புகைப்படங்களின் உண்மையான பின்னணியை ஆராயாமல் முன்டியடித்துக் கொண்டு பிரசுரித்திருப்பது கவலைக்குறிய விடயமே. சனல் 4 தொலைக்காட்சி சேவை ஜெனீவா, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் அனுசரணையுடனான பிரேரணையை வெற்றி கொள்ளச் செய்து இலங்கையில் இனங்களுக்கிடையே உருவாகியிருக்கும் சமாதானப் புரிந்துனர்வையும் சகவாழ்வையும் சீர் குலைத்து அதன் மூலம் இலாபம் காண முனைந்திருக்கின்றது.

இதற்கு முன்னரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஜெனீவா மாநாடு நடைபெறும் போது இப்படியான போலி கட்டுக்கதைகளை எல்ரிரிஈயை ஆதரிக்கும் இயக்கங்களும் அரச சார்பற்ற சில இனத்துரோக சக்திகளும் பரப்பி வருவதை வழமையாக கொண்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில்தான் சனல் 4 இந்தக் காட்சியை வெளியிட்டிருக்கின்றது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இற்றைக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. தற்போதுதான் எம் மக்கள் சுபீட்ச்சத்தைக்காண ஆரம்பித்திருக்கின்றனர். சிறப்பானதோர் எதிர் காலத்தை நோக்கிய தம் பயனத்தை ஆரம்பித்திருக்கின்ற இவ் வேளையில் இப் புகைப்படங்களை சனல் 4 என்ன நோக்கத்திற்காக வெளியிட்டுள்ளது என்பதை எவருமே இலகுவில் புரிந்து கொள்வர்.

சனல் 4 வெளியிட்டுள்ள சிறுவனைப் புலிகளே படுகொலை செய்து அந்தப் பழியை அரசாங்கத்தின் மீது போடமுயற்சி செய்துள்ளதுடன் இதனூடாக அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தவும் அவர்கள் எண்ணியுள்ளனர்.

ஆனால், எமது அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பதிலுமே குழந்தைகளைப் படுகொலை செய்ததே கிடையாது. பொறுப்பு வாய்ந்த ஒரு அரசுக்கு அப்படியான தேவையும் ஏற்படாது.

இலங்கை அரசாங்கம் எச்சந்தர்ப்பத்திலும் சிறுவர்களை ஆயுதமேந்தி யுத்தக் களத்துக்கு அனுப்பவில்லை.மாறாக புலிகள் 8, 10 வயதுடைய சிறுவர்களை பலவந்தமாகப் பிடித்து ஆயுதப் பயிற்சி அளித்து யுத்தத்தில் ஈடுபடுத்தினர். அவர்களே குழந்தைகளை குடூரமான கொலைகளையும் செய்தனர். ஆனால் அரசாங்கம் 21 வயதுக்கு மேற்பட்டவர்களையே ஆயுதப் படைக்கு ஒழுங்கு முறையாக சேர்த்துப் பயிற்சி அளித்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றது.

இராணுவம் எக்காரணம் கொண்டும் மனிதாபிமானமற்ற முறையில் யுத்த முனையில் அப்பாவிகளை சுட்டுக்குவிக்கவில்லை. எல்.ரிரிஈ பயங்கரவாதிகளே தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றார்கள். யுத்தத்தின் கடைசி கட்டத்தில் எல்ரிரிஈயினரின் பிடியில் இருந்து இராணுவத்தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவி தமிழ் மக்களை இந்தக் கொடிய பயங்கரவாதிகளே சுட்டுக் கொல்வதை முழு உலகமும் கண்கூடாகக் கண்டது.

ஒரு நல்ல நற் பண்புகளையும் உடைய ஒருவனுக்கு எதிராக போலி வதந்திகளையும் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து சுமத்தி வருவதால் உண்மையறியாத மக்கள் அவனின் மேல் அவநம்பிக்கை கொள்வார்கள் என்ற ஹிட்லரின் கொள்கையையே இவ் இனவிரோத சக்திகளும் பின்பற்றுகின்றனர்.

இன விரோத சக்திகளின் போலி பிரச்சாரங்களுக்கு ஏமாந்த பல நாடுகள் அவர்களின் துஷ்ட செயல்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உடந்தை போகின்றனர்.

புலிகள் தலைவர் பிரபாகரனிக் மகனை இலங்கை அரச படையினர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டும் சனல் 4 தொலைக்காட்சி சேவையானது, யுத்தத்தின் போது புலிகள் பல இலட்சக்கணக்கான அப்பாவிச் சிறுவர்களையும் பொது மக்களையும் கொடூரமாக கொலை செய்தமையை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்று புரியவில்லை?

சாதாரன பொது மக்களின் பிள்ளைகளை ஏன் இவர்கள் கண்டுகொள்வதில்லை? இவர்களை வைத்து படம் எடுத்தால் அவற்றை அதிக விலைக்கு விற்கமுடியாது என்பதற்காகவா? அவர்களது பெற்றோருக்கு தமது பிள்ளைகள் குறித்து கனவுகாண தகுதி இல்லை என்பதற்காகவா? இல்லை சிறுவர்கல் முதியவர்கள் எனப் பார்க்காமல் புலிகள் தமது சொந்த சமூகத்தை கொன்று குவித்ததை மக்கள் மனதில் இருந்து இவர்கள் அழித்துவிட முயற்சிக்கின்றார்கலா?

அவ்வாறே புலிகள் இயக்க உறுப்பினர்களது குடும்பத்தவர்களை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்றால், கடற்புலித் தலைவர் சூசையினதும் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு ப.. தமிச்செல்வனின் மனைவி பிள்ளைகளை ஏன் பாதுகாப்பாக கொழும்பிற்கு அழைத்துவந்து பாதுகாக்க வேண்டும்?

தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி, தனிநாடு, தனியாட்சி கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை அரசாங்கத்துக்கெதிராக பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர், இன்றும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது. இவர்களது செயற்பாடுகளால் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர் காவுகொள்ளப்பட்டதுடன், பல கோடி சொத்துக்களுக்கும் அழிவு ஏற்பட்டது.

ஆனால் பொறுப்பு மிக்க அரசானது, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரனடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கக்கூடிய வகையில் வினைத்திறன் மிக்கதுமான புனர்வாழ்வுத்திட்டத்தை மிகுந்த எதிர்பார்புடன் திட்டமிட்டு முன்னெடுத்த்தில் வெற்றியும் கண்டுள்ளது.

இலங்கையில் நிலவிய பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து பலர் நஷ்டவாளிகள் ஆகியியுள்ளனர். உலகளாவிய ரீதியில் விடுதலைப்புலிகளுடன் சட்டவிரோதமாக வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை கொண்டுநடத்துபவர்களுக்கு விடுதலைப்புலிகள் இல்லாதொழிக்கப்பட்டமை அவர்களை வீதிக்கிறக்கியது போலாயிற்று. போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் ஆயுதக்கடத்தல் மூலம் மில்லியன் கணக்கான பணத்தை இவர்கள் சம்பாதித்து சொகுசு வாழ்கையையும் அனுபவித்து வந்தனர்.

புலிகளின் தூதுவர்கள், மில்லியன் கணக்கான டொலர்களை நாளாந்தமும், மாதாந்தமும் மற்றும் வருடாந்தமும் புலம்பெயர் மக்கள் மூலம் திரட்டி வந்தனர். இம் மக்களில் சிலர் தமது சொந்தப் பணத்தை விருப்பத்திலும் மற்றும் சிலர் வலுக்கட்டாயத்தின் பெயரிலும் செலுத்தி வந்தனர். இதைத்தவிர பயங்கரவாதிகளுக்கு மேலும் பல வழிகள் வருமாணம் திரட்டுவதற்கும் இருந்து வருகின்றது..

இவ்வாறு கிடைக்கப் பெறும் வருமாணங்களை பயன்படுத்தி இப் பயங்கரவாதிகள் தம்மை பலப்படுத்திக்கொண்டு பல சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு நாட்டின் இறையான்மையை முற்றாக சீர்குலைத்தனர்.

பயங்கரவாதிகள் முற்றாக தோற்றக்கடிக்கப்பட்ட பின்னர் இவர்கள் ஆரதவு சக்திகள் நஷ்டவாளிகள் ஆகி தமது இலாபத்தை முற்றாக இழந்தனர்.

இருப்பினும் இலங்கையில் வாழ்ந்த அனைத்து இன மக்களும் தற்கொலை குண்டு தாக்குதல், குண்டு வெடிப்பு, சிறுவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பு, உயிரிழப்பு மற்றும் அனைத்து அழிவுகளிலும் இருந்து சுகந்திரம் பெற்றனர். அதனைத்தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தில் மூலம் வடக்கில் வாழும் மக்கள் நிரந்தர நிம்மதியையும், சுகந்திரத்தையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொண்டனர். நாடு பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது.

சத்தியம் என்றும் நிலைத்திருக்கும். உண்மையை போலிக்கட்டுக்கதை கள் மூலம் மறைத்துவிட முடியாது என்பதை ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் நிரூபித்து நீதிக்கும், அநீதிக்கும் இடையிலான தர்ம யுத்தத்தில் எங்கள் நாட்டை வெற்றியடையச் செய்து, உலக நாடுகளின் பாராட்டை எமக்கு பெற்றுக் கொடுக்கும் என்பதில் ஐயமே இல்லை

No comments:

Post a Comment