Saturday, January 05, 2013
புதுடெல்லி::டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை கற்பழித்த ராம்சிங், முகேஷ் சிங், பவன், வினய், அக்ஷய் மற்றும் 17 வயது மைனர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடந்த வியாழக்கிழமை 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தெற்கு டெல்லியில் உள்ள சாகெத்மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அந்த குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். அந்த குற்றப்பத்திரிகையை சாகெத் கோர்ட்டு மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். பிறகு அவர் இந்த வழக்கு விசாரணையை 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். இன்று (சனிக்கிழமை) டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விரைவு கோர்ட்டுக்கு மாற்றி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணை விரைவு கோர்ட்டில் தொடங்கியது. திங்கட்கிழமை முதல் தினமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும். ராம்சிங், அக்ஷய் தாக்கூர், வினய் சர்மா மற்றும் 17 வயது மைனர் ஆகிய 4 பேர் மீது வலுவான குற்றச்சாட்டுக்களும் ஆதாரங்களும் உள்ளன. எனவே அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 வயது மைனர் சிறுவர் சீர்சிருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மீதான விசாரணை மட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கோர்ட்டில் தனியாக நடைபெறும். அவனை தப்ப விட்டு விடக்கூடாது. அவனுக்கும் அதிகபட்ச தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் என்பதில் டெல்லி போலீசார் தீவிரமாக உள்ளனர்.
No comments:
Post a Comment